search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா சட்டமன்றம்"

    கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. KarnatakaFloorTest #CongressMLAs #BJP
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததால், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. காலையில் அவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வரவில்லை. அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்தபோது இருக்கையில் இல்லை. பின்னர் பிரதாப் கவுடா தாமதமாக வந்து பதவியேற்றார்.  இதே போல் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் பெயரை சபாநாயகர் வாசித்த போது அவர் அவையில் இல்லை.

    எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரும்போது, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் இருந்தாலோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்தாலோ, அவையின் பலம் குறைந்து, எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும்.

    எனவே, இன்று மாலை 4 மணிக்குள் மேலும் சில எம்.எல்.ஏ.க்களை வாக்கெடுப்பில் பங்கேற்க செய்யாமல், குறுக்கு வழியை பா.ஜ.க. நாடலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை குறி வைத்து பா.ஜ.க. தனது இறுதிக்கட்ட பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaFloorTest #CongressMLAs
    ×